Regional02

வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் : உதகை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

உதகை நகராட்சி ஆணையர் சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

2021-22-ம் நிதியாண்டு தொடங்கி நான்கு மாதங்களான நிலையில், உதகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து வரி,தொழில் வரி, குடிநீர் கட்டணம், வடிகால் கட்டணம், ஆக்கிரமிப்புகட்டணம், கடை வாடகைக் கட்டணம், குத்தகை இனங்கள் மற்றும் தொழில் வரி உரிமம் போன்ற இனங்களுக்கு வரிதாரர்கள் மற்றும் பொதுமக்களில் சிலரே வரி செலுத்தி உள்ளனர். வரி செலுத்தாத நபர்கள், உடனடியாக நகராட்சி அலுவலகம் மற்றும் சந்தைப் பகுதியில் அமைந்துள்ள வரிவசூல் மையத்தில் உரிய வரி தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

தவறும்பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, வடிகால் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நகராட்சிப் பகுதிகளில் உள்ள பல கடைகள் வாடகை, சொத்துவரி, தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம் போன்றவற்றை உரிய காலகட்டங்களில் செலுத்தாததால், நகராட்சி ஊழியர்களது ஊதியம், வாகனஎரிபொருள் செலவினம், மின்கட்டணம், மேலும் பல நிர்வாக செலவினங்கள் மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து வரிதாரர்களும் உடனடியாக நிலுவை மற்றும் நடப்பு வரி தொகையை செலுத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT