காஞ்சிபுரம் மாவட்டம், பாலுச்செட்டி சத்திரத்தை அடுத்த கீழம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி மலர்(39). இவர், 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் மலரின் கழுத்து மற்றும் வாயை அழுத்திப் பிடித்துள்ளார். இதில், அவர் மயங்கினார்.பின்னர், அவரின் கழுத்திலிருந்த தாலி செயின் உட்பட 5 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு, மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் பாலுச்செட்டி சத்திரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு முசரவாக்கத்தைச் சேர்ந்த சீராளன்(39) என்பவரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.