Regional02

மீன் வளர்க்க அரசு மானியம் பெற : விண்ணப்பங்கள் வரவேற்பு :

செய்திப்பிரிவு

மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகளுக்கு ஒரு ஹெக்டேரில் மீன்குளம் அமைக்க ஆகும் செலவு ரூ.7 லட்சத்தில் 50 சதவீதம் மானியமாக ரூ.3.50 லட்சம் மற்றும் ஒரு ஹெக்டேர் நீர்பரப்பில் மீன்வளர்ப்பு செய்ய ஆகும் உள்ளீட்டு செலவினத்துக்கான தொகை ரூ.1.50 லட்சத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும்.

எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்.05, சங்கர் நகர், பாலாஜி தெரு, வேண்பாக்கம், பொன்னேரி (தொலைபேசி எண்.044-27972457) அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT