குறிஞ்சிப்பாடி அருகே கல்குணத்தில் வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம். 
Regional02

குறிஞ்சிப்பாடி அருகே கல்குணத்தில் - இடிந்து விழும் நிலையில் விஏஓ அலுவலக கட்டிடம் :

செய்திப்பிரிவு

குறிஞ்சிப்பாடி அருகே கல்குணத் தில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

குறிஞ்சிப்பாடி வட்டம் கல்குணம் ஊராட்சியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலு வலர் அலுவலகம் தற்போது பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு செல்லஅச்சப்பட்டு வருகிறார்கள்.

எந்நேரத்திலும் கட்டிடம் இடிந்து பொதுமக்கள் மீது விழும் நிலை உள்ளது. கிராம நிர்வாக அலுவலரும் வேறு வழியின்றி தினம் அலுவலகத்துக்கு சென்று பயந்து கொண்டு பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பாழடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "எங்கள் ஊரில் 40 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதது வருத்தத்தை அளிக்கிறது.

தற்காலிகமாக அந்த அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். மாவட்ட நிர் வாகம் துரிதகதியில் புதிய கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

SCROLL FOR NEXT