Regional02

உணவக ஊழியரிடம் ரூ.2.85 லட்சம் திருட்டு :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் உணவக பணியாளரிடம் ரூ.2.85 லட்சத்தை திருடிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் முரளி (42). இவர் தனியார் உணவகம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்க நேற்று முன்தினம் வங்கியில் இருந்து ரூ.2.85 லட்சம் எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தின் இருக்கையின் அடியில் உள்ள அறையில் வைத்திருந்தார்.

வழியில் உணவகத்துக்கு தேவையான சில பொருட்களை வாங்க ஒரு கடையின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். திரும்ப வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.85 லட்சத்தை காணவில்லை. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT