Regional01

சேலத்தில் கரோனா தடுப்புப் பணியில் 70 குழுக்கள் :

செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சி பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பரவாமல் தடுத்து கட்டுப்படுத்திட கோட்டங்கள் வாரியாக சிறப்பு பகுதிகளில் கண்காணித்தல், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் பணிகளை மேற்கொள்ளவும், தொடர் கண்காணிப்பில் ஈடுபடவும் மாநகராட்சி அலுவலர்களை உள்ளடக்கிய 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் தொடர்புடைய கோட்டங்கள் பகுதி வாரியாகபிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் கண்காணிப்பு அலுவலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் நிலையில் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் என 5 பேர் ஒவ்வொரு குழுவிலும் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில்உள்ளவர்களை கண்டறிந்து வீடுகளுக்கு சென்று சளி தடவல் மாதிரி சேகரிக்கநடவடிக்கை எடுத்து வருகின்றனர். நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 பேருக்கு மேல் உள்ள தெருக்களை கட்டுபடுத்தப்பட்ட மண்டலப் பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பர்.

மேலும், தடுப்பூசி முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முறையாக தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்தல். தனிநபர் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வார்கள் என மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT