Regional02

கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் கைவினை கலைஞர்களுக்கு புதிய கடனுதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஆண்களுக்கு 5 சதவீத வட்டி, பெண்களுக்கு 4 சதவீத வட்டியில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர் என்றால் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர் என்றால் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அல்லது மாவட்ட, தொடக்க கூட்டுறவு வங்கிகளில் திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்கலாம் என்று தேனி ஆட்சியர் க.வீ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT