Regional01

3 வீடுகளில் நகை, பணம் திருட்டு :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் அபிராமபுரத்தில் வசித்து வருபவர் அருண்குமார்(28) அரசு பள்ளி ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டுக்கு சென்றிருந்தார். இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டிலிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், மூன்றரை பவுன் நகைகள் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி சின்னப்பிள்ளை(45), தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டிலிருந்த 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.

இதேபோல, அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து மகன் பொன்னுசாமி(33) வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை திருடிச் சென்றிருந்தனர். பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT