Regional02

அனைத்து ரயில்களையும் இயக்கக் கோரி தஞ்சாவூரில் ஆக.10-ம் தேதி ஆர்ப்பாட்டம் : ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

செய்திப்பிரிவு

அனைத்து ரயில்களையும் இயக்க வலி யுறுத்தி தஞ்சாவூரில் ஆக.10-ல் ஆர்ப்பாட் டம் நடத்துவது என ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

தஞ்சாவூரில் ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டம், சங்கத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், நிர்வா கிகள் வெ.ஜீவக்குமார், கோ.அன்பரசன், ஆர்.பி.முத்துக்குமரன், கே.எம்.ரங்கராஜன், ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கரோனா ஊரடங்கு காரணமாக, திருச்சி- மயிலாடுதுறை வழித் தடத்தில் செல்லும் அனைத்து பயணிகள் ரயில்களும் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது, பொதுப் போக்குவரத்து தொடங்கியுள்ளதால், அனைத்து பயணிகள் ரயில்களையும் உடனடியாக இயக்க வேண்டும்.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மாணவர்களுக்கான பயணச் சலுகைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். பிளாட்பார்ம் டிக்கெட்டை ரூ.50 ஆக உயர்த்தியதைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தஞ்சாவூரில் ஆக.10-ம் தேதி ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT