திருநெல்வேலி மாநகராட்சி 4 மண்டல பகுதிகளில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டை ரூ. 40 கோடி செலவில் 2 தளங்களுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய கட்டிட பணிகள் நடைபெற இருப்பதால் மார்கெட்டிலுள்ள கடைகள் மற்றும் வாகனங்களை தற்காலிகமாக அருகில் உள்ள பாளை மார்க்கெட் திடல் மற்றும் எருமைக்கிடா மைதானத்துக்கு மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றதை அடுத்து மாநகராட்சி மைய அலுவலகக் கூட்டரங்கில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா.விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை