Regional02

ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு காவல் நிலையத்தில் புகார் :

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு அருகே ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செங்கல்பட்டு பாசனப் பிரிவு உதவி பொறியாளர் டி.குஜராஜ் கொடுத்துள்ள புகார் விவரம்: கூடுவாஞ்சேரி ஏரியில் இருந்து அடையாற்றுக்கு கிளை கால்வாய் ஒன்று செல்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அடையாற்றில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்தக் கால்வாயின் கரைகளும் பலப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் சில சமூக விரோதிகள் இந்த கால்வாயின் கரைகளை சேதப்படுத்தி இந்தப் பகுதியை சமன் செய்து ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT