Regional01

உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல் கள்ளக்குறிச்சியில் இன்று கருத்துக் கேட்பு :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல்கள் குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகளை நடத்துவதற்கு வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு. அவற்றிற்கான வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல்கள் நேற்று முன்தினம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் அனைத்து கிராம ஊராட்சி அலுவலகங்களில் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் இன்று முற்பகல் 11 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற இருப்பதாக ஆட்சியர் தர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT