Regional02

தாய்ப்பால் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலகதாய்ப்பால் வார விழா நடைபெற்றது. ஆட்சியர் கி.செந்தில் ராஜ்தலைமை வகித்தார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் விழாவை தொடங்கி வைத்தார்.

தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களை சந்தித்து தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. வளரும் குழந்தைகளுக்கு இணை உணவுகளை அங்கன்வாடி பணியாளர்கள் நேரடியாகச் சென்று வழங்கி வருகின்றனர் என்றார்.

மருத்துவமனை டீன் டி.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT