Regional02

10 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் :

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட எஸ்.பி அலுவலக தனிப் பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்.கோபிநாத் அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலையத்துக்கும், திருச்சி மாவட்ட மோட்டார் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பி.பொன்ராஜ் கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் போக்கு வரத்து ஒழுங்கு பிரிவுக்கும், அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஏ.மகாலட்சுமி அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக் கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டராக இருந்த சி.சுப்பிரமணி பெரம்பலூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், நாகப்பட்டினம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் பணியாற்றிய வி.தமிழரசி பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், சேலத்தில் பணியாற்றிய எஸ்.பொன்ராஜ் திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையத்துக்கும், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய ஜே.கே.கோபி அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலையத்துக்கும், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்த எம்.செந்தூர்பாண்டியன் கரூர் நகர காவல் நிலையத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றிய பி.ஜெயலட்சுமி, கரூர் நகர காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆர்.சிவசுப்பிரமணியன் ஆகியோர் திருச்சி சரக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி சரக டிஐஜி ராதிகா பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT