Regional01

நலஉதவிகள் வழங்கல் :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமார் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ், 133 பேருக்கு ரூ.5.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் உட்பட 99 பேருக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை, 12 பேருக்கு இலவச தையல் இயந்திரம், 10 பேருக்கு இலவச தேய்ப்பு பெட்டி, 5 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT