கடலூர் அருகே வரகால்பட்டில் விவசாயிகளுக்கு நடந்த பயிற்சியில் இயற்கை முறையில் உரம் தயார் செய்யும் முறையை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டார். 
Regional01

கடலூர் அருகே வேளாண்துறை சார்பில் - விவசாயிகளுக்கு அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி :

செய்திப்பிரிவு

கடலூர் வரக்கால்பட்டில் விவசாயி களுக்கு அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து ஒரு நாள் சிறப்பு பயிற்சி நேற்று நடைபெற்றது.

இயற்கை விவசாய இடுபொ ருட்கள் கையேட்டினை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர்பேசியது: ரசாயன உரங்களை கட்டுபாடின்றி தொடர்ந்து பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நன்மை தரக்கூடிய நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் ஆகியன அழிவதுடன் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இயற்கை முறையில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து பூச்சி விரட்டிகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை விவசாயிகள் தாமாகவே தயாரித்து பயன்படுத்துவதால் நல்ல பலன் ஏற்படுவதை கண்கூடாக தெரிந்துள்ளனர் என்றார்.

நிகழ்வில் வேளாண் இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்) ஜெயக் குமார்,கடலூர் வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT