Regional02

குண்டர் சட்டத்தில் தந்தை, மகன் சிறையில் அடைப்பு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை, மகன் இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரகுமத் நகர் பகுதியைச் சேர்ந்த கொம்பையா (49) மற்றும் அவரது மகன் மணிகண்டன் (23) ஆகிய இருவரும் கடந்த 28-ம் தேதி ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வைகுண்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த அவர்களை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

கொம்பையா, மணிகண்டன் ஆகிய இருவரும் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT