Regional02

வருவாய்த் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ள தற்காலிக துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுகை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கோரிக்கை மனுக்கள் அந்தந்த கோட்டாட்சியரிடம் அளிக்கப்பட்டன. புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வைரவன் தலைமை வகித்தார்.இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

SCROLL FOR NEXT