வேலூரில் நடைபெற்ற காவலர் தேர்வில் 438 பேர் இறுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான இரண்டாம் கட்ட தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது.
மூன்றாம் நாளான நேற்று 500 பேர் பங்கேற்க அழைக்கப்பட்டனர். இதில், ஒருவர் பங்கேற்காத நிலையில் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டம் என 61 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 438 பேர் இறுதித் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.