Regional04

வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, திருச்செங்கோடு அடுத்த குமரமங் கலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் ஆர்.சக்திவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.சி.சக்திவேல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT