சேலத்தில் வாழை இலை வியாபாரி கொலை வழக்கில், அவரது மனைவி உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் வாழை இலை வியாபாரி பிரபு.
இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அம்மாப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரபுவின் மனைவி ஷாலினி மற்றும் ஷாலினிக்கு முகநூல் மூலம் நண்பரான துறையூரைச் சேர்ந்த காமராஜ் (23) என்பவரும் சேர்ந்து பிரபுவை கொலை செய்தது தெரிந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.