Regional02

உள்ளாட்சி தேர்தல்: காங். ஆலோசனை :

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சிசார்பில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. வாரணவாசியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் அளவூர் நாகராஜன் தலைமை வகித்தார். இதில், காஞ்சிபேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். வரும் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

மேலும், ராகுல் காந்தியை பிரதமராக்கும் வகையில் கட்சியைப்பலப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட துணைத் தலைவர் ராஜசேகரன், பொதுச் செயலர் சத்யா பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT