ராமநாதபுரம் அருகே வயலூரில் நிலைதடுமாறி கவிழ்ந்த நகரப் பேருந்து. படம்:எல்.பாலச்சந்தர் 
Regional02

ராமநாதபுரம் அருகே - பேருந்து கவிழ்ந்து விபத்து :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அருகே அரசு நகரப் பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்தது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

ராமநாதபுரத்திலிருந்து குளத்தூருக்கு நகர பேருந்து நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அதில் பெண்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். வயலூர்-பெருங்களூர் இடையே சென்றபோது திடீரென நிலைதடுமாறி சாலையிலிருந்து வயல்காட்டில் பேருந்து கவிழ்ந்தது. இதில் பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்ளிட்ட அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். அதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் நகர் பணிமனையிலிருந்து மீட்புவாகனம் கொண்டு செல்லப்பட்டு விபத்துக்குள்ளான பேருந்து மீட்கப்பட்டு பணிமனைக்கு கொண்டுவரப்பட்டது.

SCROLL FOR NEXT