மகாராஜகடை வனப்பகுதியில் உள்ள காட்டு வீரஆஞ்சநேயர் கோயிலில் விதைப்பந்து திருவிழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை வனப்பகுதியில் உள்ள அங்கனாமலை காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில் 23-வது ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு விதைப்பந்து திருவிழா நடந்தது.
இதில், சொர்க்க மரம், இலந்தை மரம், பூவரசு, வாகை, கத்தி சவுக்கு உள்ளிட்ட 15 ஆயிரம் விதைகளைக் கொண்டு விதைப்பந்துகளாக தயாரித்து கோயிலுக்கு வரும் பக்தர்களைக் கொண்டு மகாராஜகடை வனப்பகுதியில் வீசப்பட்டன. விதைப் பந்துக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் ராஜேஷ் செய்திருந்தார்.