வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சுப்பையாவும், திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக ராமகிருஷ்ணனும், ராணிபேட்டை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் அசோக்குமாரும் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர். 
Regional02

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - மக்கள் செய்தி தொடர்பு அலுவலர்கள் பொறுப்பேற்பு :

செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த மோகன், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, சுப்பையா வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த அசோக்குமார், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் ராணிப்பேட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதேபோல, சென்னை செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன், திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.

SCROLL FOR NEXT