Regional02

பல்லடம் அருகே மோதல்: 7 பேர் கைது :

செய்திப்பிரிவு

பல்லடம் ராயர்பாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி மணிகண்டன் (27). மகாலட்சுமி நகர் அருகே உள்ள மைதானத்தில் மது அருந்திவிட்டு, மற்றொரு தரப்பினரிடம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கேட்டு நச்சரித்ததால், கனகராஜ் என்பவர் தாக்கியுள்ளார்.

இதையடுத்து, ராயர்பாளையத்தை சேர்ந்த கதிர், கர்ணன் மற்றும் காரில் வந்தபிரபு ஆகியோருடன் மணிகண்டன் வந்து,தாக்கியவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், கவுண்டம்பாளையம் சாலையில் காரை வேகமாக பிரபு ஓட்டி வந்து, சங்கரலிங்கம் என்பவர் மீது மோதியதில், அவர் 200 மீட்டர் தூரம்இழுத்துச் செல்லப்பட்டார். பல்லடம் அரசுமருத்துவமனையில் முதலுதவிக்கு பின்னர்,கோவை அரசு மருத்துவமனையில் சங்கரலிங்கம் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக மணிகண்டன் (27), கர்ணன் (28),கனகராஜ் (35),சரவணன் (27), சக்திவேல் (25), மகேஷ் (25), விக்கி (22) ஆகிய 7 பேர் மீது வழக்குபதிந்து பல்லடம் போலீஸார் கைது செய்தனர். கதிர், பிரபு ஆகியோர் தலைமறைவாகினர்.

SCROLL FOR NEXT