Regional03

பள்ளிபாளையத்தில் பாஜக சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் :

செய்திப்பிரிவு

பள்ளிபாளையத்தில் பாஜக சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை மலர்கள் தூவி மரியாதை செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை உள்ளிட்ட நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப்போராட்ட வீரர்களை இளைய தலைமுறையினருக்கு அவர்களின் தியாகங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது. கொல்லிமலையை ஆட்சி செய்த மன்னர் வல்வில் ஓரி குறித்து சங்ககாலப் பாடல்கள் கூறுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து அவரின் புகழ் இன்றும் நிலைப்பெற்றுள்ளது. அதற்கு அவர்களின் கொடைத்தன்மை முக்கிய காரணமாகும், என்றார். நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT