Regional03

மேல்மலையனூர் கோயிலில் ஆடி அமாவாசை தரிசனம் ரத்து :

செய்திப்பிரிவு

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை உட்பட மூன்று நாட்களுக்கு, அதாவது வரும் 6-ம் தேதிமுதல் 8-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ராமு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் ஆடி அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT