Regional01

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் - 100 சதவீதத்தை எட்டவுள்ள கொடைக்கானல் :

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் கொடைக்கானல் விரைவில் 100 சதவீதத்தை எட்டவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மாவட்டம் முழுவதும் மும்முரமாக நடந்துவருகிறது.

மாவட்டத்தில் கொடைக்கானல், பழநியில் அதிகமானோர் வருவதால் இரு நகர் பகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 4 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கும், 2-வது டோஸ் 94 ஆயிரம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

ஆன்மிக தலமான பழநி நகர் பகுதியில் இதுவரை 68 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேபோல சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் இதுவரை 99.50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. இன்னும் 120-க்கும் மேற்பட்டோருக்கு மட்டும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். சுகாதாரத்துறையினர் அவர்களை வீடு வீடாக தேடி வருகின்றனர்.

விரைவில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT