சேலம் அம்மாப்பேட்டை மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் பிரபு (39). வாழை இலை வியாபாரி. இவர் தனது சகோதரி மகள் ஷாலினியை (24) இரண்டுஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்தார். ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவில் ஷாலினி, 108 ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்து, தனது கணவருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்த போது, பிரபு உயிரிழந்து கிடந்தார்.
பிரபுவின் காது மற்றும் உள்ளங்கையில் சிராய்ப்பு காயம் இருந்தது. இதுதொடர்பாக ஷாலினியிடம் அம்மாப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்தார்.
மேலும், முகநூல் மூலம்துறையூரைச் சேர்ந்த ஆண் நண்பருடன், ஷாலினி பழகிவந்துள்ளார். இதனால், ஷாலினியிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர். மேலும், ஷாலினியின் ஆண் நண்பரிடம் விசாரிக்க தனிப்படை போலீஸார் துறையூர் சென்றுள்ளனர்.