Regional03

ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம் :

செய்திப்பிரிவு

சேலம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

சேலம் மாவட்டம் தேவூர் அரசிராமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (25). கூலி தொழிலாளி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவி திலகா அரசிராமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவக் கல்லூரி அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸை நிறுத்தி மருத்துவ ஊழியர்கள் அனிதா, பிரியங்கா மற்றும் குமார் ஆகியோர் பிரசவ சிகிச்சை அளித்தனர். இதில், திலகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT