தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்க மாநிலபொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் பி.சதீஷ் தலைமை வகித்தார். துணைபொதுச் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட தலைவர் எம்.எஸ்.அய்யாதுரை, மாவட்டச் செயலாளர் ஜெ.பிராங்கிளின் ஜோஸ், பொருளாளர் சந்தியாகுஉள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கரோனா களப்பணியாளர்களுக்கு அரிசி பை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
தனியார் பள்ளி ஆசிரியர்கள்ஒன்றரை ஆண்டுகளாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் கரோனா நிவாரணம் வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கான சொத்துவரி, வாகனங்களுக்கான சாலைவரி, பெர்மிட் போன்றவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.