தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள வாழவல்லான் மேலூர் நடுத் தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி மனைவி முத்துக்கிளி (74). நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டுக்கு பின்புறம் வந்த இவரை, மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் அவர் மரணமடை ந்தார். பின்னர் அவர் அணிந்திருந்த 9.5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலையாளிகளை பிடிக்க டிஎஸ்பி வெங்கடேசன் மேற்பார்வையில் ஏரல் ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.