Regional03

அரசு மருத்துவமனைக்கு கரோனா தடுப்பு மருந்து :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி வஉசி துறைமுகம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.17.50 லட்சம் மதிப்பிலான கரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன.

வஉசி துறைமுக நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன் கரோனா தடுப்பு மருந்துகளை, மருத்துவமனை டீன் டி.நேருவிடம் வழங்கினார். மேலும், முள்ளக்காடு ஆரம்ப சுகாதார மையத்தின் பயன்பாட்டுக்காக பிரிண்டர் வழங்கப்பட்டது.

விழாவில் துறைமுக பொறுப்புக் கழகத்தலைவர் பேசும்போது, “வஉசி துறைமுகம்கடந்த ஆண்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.40.50 லட்சம் மதிப்பிலான பல்வேறுமருத்துவ உபகரணங்கள், ரூ.1.05 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் பல்வேறு உபகரணங்களை வழங்கியுள்ளது. பாரத பிரதமரின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி, தமிழகமுதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், பிரதமரின் கரோனா நிவாரண நிதிக்கு துறைமுக ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் ரூ.14.79 லட்சம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT