Regional01

தென்னை விவசாயிகள் அதிக மகசூல் பெற - நுண்ணூட்ட உரக்கலவையை பயன்படுத்த வேண்டும் : திருப்பத்தூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் ஆலோசனை

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் அதிக மகசூல் பெற ‘நுண்ணூட்ட உரக் கலவையை’ பயன்படுத்த வேண்டும் என வேளாண் துறை இணை இயக்குநர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் 11.350 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப் படுகிறது. தென் னையில் அதிக மகசூல் பெற விவசாயிகள் தொழு உரம், மக்கிய கம்போஸ்ட் பசுந்தாள் உரம் ஆகியவற்றை பயன்படுத்தி வரு கின்றனர். தென்னையில் மகசூலை பெருக்க தேவையான நுண்ணூட்ட சத்துக்கள் பயன்படுத்துவது மிகவும் அவசியமானதாகும்.

விவசாயிகள் தென்னை சாகுபடியில் நுண்ணூட்ட உரக் கலவையை பயன்படுத்தும் போது நுண்ணூட்ட சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்கிறது.

இதனால், குரும்பைகள் உதிர்வது தடுக்கப்பட்டு தரமான தேங்காய்கள் உற்பத்தி செய்து, வழக்கத்தை காட்டிலும் கூடுதல் மகசூல் பெற முடியும்.

நுண்ணூட்ட சத்தில் உள்ள இரும்புச்சத்து தென்னை ஓலையில் பச்சையத்தை உருவாக் கவும், பயிரின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு துணை புரியும். இது தவிர பல்வேறு என்சைம்கள் உருவாக்கவும், இயக்கவும் இது உறுதுணையாக இருக்கும்.

மாங்கனீஸ் சத்து மண்ணில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்களை தென்னை மரம் எடுத்துக்கொள்ள நுண்ணூட்ட உரக்கலவை பெரும் உதவியாக இருக்கும்.

உரக்கலவை இருப்பு உள்ளது

தென்னைக்கு பயன் அளிக்கக் கூடிய நுண்ணூட்ட உரத்தை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து ஆண்டுக்கு ஒரு முறை இட வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் தென்னை நுண்ணூட்ட உரக்கலவை தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப் பட்டுள்ளது.

ஆகவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் நுண்ணூட்ட கலவை உரத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று வருமானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் தென்னை நுண்ணூட்ட உரக்கலவை தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT