விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், எஸ்பி நாதா முன்னிலையில் நேற்று பெண் விண்ணப்பதாரர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. 
Regional01

விழுப்புரத்தில் காவலர் தேர்வில் - 201 பெண்கள் அடுத்த கட்ட உடற்தகுதி தேர்வுக்கு தேர்ச்சி :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் கடந்த 2020-21-ம் ஆண்டிற்கான 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றி தழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இதில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்ட 350 பெண் விண்ணப்பதார்களில் 89 பேர் வருகை தரவில்லை. மற்றவர்களில் 201 விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற் றுள்ளனர்.

SCROLL FOR NEXT