தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் ஆயுதப்படை 2-ம் நிலைக் காவலர், சிறைக் காவலர்கள், 2-ம் நிலைக் காவலர், தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
விருதுநகரில் உள்ள கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கான உடல் தகுதித் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், 400 மீ ஓட்டம், உயரம் அளத்தல் உள்ளிட்ட உடல் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வு நடப்பதை மதுரை சரக டிஐஜி காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.