Regional03

மதுரையில் குற்றங்களை தடுக்க துப்பாக்கிகளுடன் போலீஸ் ரோந்து : காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா தகவல்

செய்திப்பிரிவு

மதுரையில் குற்றங்களைத் தடுக்க 32 காவலர்கள் துப் பாக்கிகளுடனும், நவீன கேம ராவை சட்டையில் பொருத்திக் கொண்டும் சுழற்சி முறையில் ரோந்து செல்கின்றனர் என மாநகர காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஜூலையில் மட்டும் 44 ரவுடி கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. குற்றப்பின்னணி நபர்கள், ரவுடிகள் 232 பேர் மீது முன்னெச்சரிக்கையாக நன்ன டத்தை பத்திரம் பெறப்பட்டுள்ளது. நன்னடத்தை விதியை மீறி குற்றச்செயல் புரிந்த 23 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரவுடி பட்டியலில் உள்ள முருகன் என்ற லோடு முருகன், காளீஸ்வரன் என்ற கிளாமர் காளி, குட்டை கண்ணன், கணக்கன் முனியசாமி, குரங்கு முத்துராமலிங்கம், காளீஸ்வரன் ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர ஜனவரி முதல் இதுவரை 7 ரவுடிகள் உட்பட 44 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை நகரில் இதுவரை 771. 470 கிலோ கஞ்சா கைப்பற்றப் பட்டுள்ளது. ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள் ளார்.

SCROLL FOR NEXT