Regional01

பாஸ்போர்ட் வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்தவர் கைது :

செய்திப்பிரிவு

மலேசியாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு வந்தது. அதில் பயணம் செய்தவர்களின் ஆவணங்களை விமானநிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சிவகங்கை மாவட்டம் பையூர் அருகேயுள்ள பனகுடியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (47) என்பவர், போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்று, அதன்மூலம் மலேசியா சென்று வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விமானநிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT