Regional01

வேலூரில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு? :

செய்திப்பிரிவு

வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோட்டைச் சேர்ந்தவர் பிச்சாண்டி (63). ஓய்வுபெற்ற பெல் நிறுவன அதிகாரி. இவர், நேற்று முன்தினம் பிற்பகல் சத்துவாச்சாரி ராம் நகரில் துக்க நிகழ்வில் பங்கேற்கச் சென்றார். வீட்டில் அவரது வயதான சித்தப்பா மட்டும் இருந்தார்.

அந்த நேரத்தில் வீடு புகுந்த மர்ம நபர்கள் லாக்கரில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். மாலையில் வீடு திரும்பிய பிச்சாண்டி நகை மற்றும் பணம் திருடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பிச்சாண்டி அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், பட்டப் பகலில் நகை, பணத்தை மர்ம நபர்கள் உண்மையில் திருடிச் சென்றார்களா? அல்்லது வேறு காரணமா? என விசாரித்தும் வருகின்றனர்.

SCROLL FOR NEXT