கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் இருந்து 20 பேர் நேற்று காலை வேளாங் கண்ணிக்கு மினி பேருந்தில் புறப்பட்டு சென்றனர். பேருந்தை கடலூரை சேர்ந்த ராஜி ஓட்டிச் சென்றார். சிதம்பரம் அருகே உள்ள தீத்தாம்பாளையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத வித மாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் நடுவில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் மின் பேருந்தில் பயணம் செய்த சகுந்தலா (60), விஜயா (50), மாரிமுத்து (45), பாலகிருஷ்ணன் (56) உட்பட 16 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் ஓட்டுநர் ராஜி உட்பட 6 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும், 11 பேர் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.