Regional01

சேலத்தில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் :

செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று (2-ம் தேதி) காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கவுள்ள பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாமாங்கம், மாரியம்மன்கோயில் தெரு, சிவதாபுரம் மாரியம்மன் கோயில் தெரு,வசக்காட்டு காலனி, பேர்லேண்ட்ஸ், அய்யந்திருமாளிகை வள்ளலார் நகர், ஜான்சன்பேட்டை மேற்கு, சுவர்ணாம்பிகை தெரு, அண்ணா நகர், வால்மிகி தெரு, பாரதியார் தெரு, பழைய பிள்ளையார் கோயில் தெரு, தாமோதரன் தெரு, கண்ணகி தெரு, வள்ளுவர் நகர், குமரன் நகர் ஆகிய பகுதிகளில் இன்று (2-ம் தேதி) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கவுள்ளது.

நண்பகல் 12 முதல் மதியம் 2 மணி வரை பொன் நகர், இந்திரா நகர், செட்டியார் தோட்டம், மெய்யனூர் மெயின்ரோடு, பெரியபுதூர், கன்னங்குறிச்சி மெயின்ரோடு, சங்கர் நகர் மற்றும் சின்ன கிருஷ்ணப்பா தெரு, கன்னாரத் தெரு, வாசக சாலை, ஹவுசிங் போர்டு குறிஞ்சி நகர், பிடாரி அம்மன் கோயில் தெரு, வித்யா நகர், பென்சன் லைன் வடக்கு தெரு, கே.பி.கரடு, தொட்டனச் செட்டிக்காடு, எருமாபாளையம் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் முகாம் நடக்கவுள்ளது.

மேலும், ஜாகீர் அம்மாப்பாளையம், காமராஜர் தெரு, அந்தோணிபுரம், டி.எம்.ரோடு, சின்னப்பன் தெரு, போயர் தெரு, ராஜா நகர், பெரமனூர் நாராயணன் பிள்ளை தெரு, வெங்கடசாமி தெரு, காமராஜர் காலனி, டாக்டர் வரதராஜன் தெரு, ஓந்தாப்பிள்ளைக்காடு, ராகவேந்திர தெரு, ராமகிருஷ்ணா ரோடு, ரங்கதாஸ் தெரு, செல்லக்குட்டிக்காடு ஜவகர்லால் தெரு, பெருமாள் கோயில் மேடு 3-வது கிராஸ் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT