சேலம் அடுத்த சிவதாபுரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த காற்றுடன் கூடிய மழையின்போது சேதமான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள். 
Regional03

தென்னை மரம் முறிந்து விழுந்ததில் சேதமான 5 மின்கம்பங்கள் அகற்றம் :

செய்திப்பிரிவு

சேலம் அருகே மழையின்போது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் சேதமான 5 மின்கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது.

சேலம் அடுத்த சிவதாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சிவதாபுரத்தை அடுத்த மொரம்புக்காடு பகுதியில், உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளின் மீது தென்னை மரம் முறிந்து விழுந்தது. இதனால், 9 மீட்டர் உயரம் கொண்ட 5 மின்கம்பங்களும் முறிந்தது. இதன் காரணமாக 13 டிரான்ஸ்பார்மர்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து,நேற்று காலை சிவதாபுரம் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலக மின் ஊழியர்கள், முறிந்த மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை நட்டனர். மேலும், மின் விநியோகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவக் கல்லூரி மின் பாதை வழியாக மின் விநியோகம் செய்யப்பட்டது.

பின்னர் புதிய மின் கம்பங்கள் மூலம் வழக்கமான பாதையில் மின் விநியோகம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

SCROLL FOR NEXT