Regional03

நாமக்கல்லில் குட்கா ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு :

செய்திப்பிரிவு

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் புகையிலை, பான் மசாலா மற்றும் குட்கா ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். தொடர்ந்து புகையிலை, பான் மசாலா மற்றும் குட்கா ஒழிப்பு தொடர்பாக உறுதிமொழி ஏற்றனர்.

முன்னதாக புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றபலரும் புகையிலை பயன்பாடு தீமைகள் குறித்து பேசினர். உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண், வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT