கரூரை அடுத்த மண்மங்கலம் மேற்கூரைச் சேர்ந்தவர் லோகநாதன்(58). இவரது மனைவி பவுன்(50). தளவாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்.
இவரது வீட்டில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 21 பவுன் நகை திருடு போனது.
இதுகுறித்த புகாரின் பேரில் கரூர் டிஎஸ்பி கு.தேவராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். வாங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.