விழுப்புரம் மாவட்டம் சித்திரைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் பூவரசன் (21), திருப்பூர் - ஊத்துக்குளி சாலை கூலிபாளையம் பகுதியிலுள்ள பழைய இரும்புக்கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், மினி லாரியை திருடிக்கொண்டு நேற்று அதிகாலை கூலிபாளையம் பகுதியில் பூவரசன் ஓட்டிச் சென்றுள்ளார். சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் இவரின் வாகனமும், திருப்பூர் நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. லாரியின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி பூவரசன் உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு ஊத்துக்குளி போலீஸார் சென்று, பூவரசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.