Regional02

அரிசி அரவை முகவராவதற்கு விண்ணப்பிக்கலாம் :

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை அரவை செய்து பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்குவதற்காக, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள தனியார் அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புழுங்கல் அரிசி அரவை முகவராக நியமனம் செய்யப்பட, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நெல் சுத்தம் செய்யும் இயந்திரம், இயந்திர உலர்த்தி, நவீன அவியல் முறை, கோண் பாலிசர், ஒயிட்னஸ், கருப்பு அரிசி நீக்கும் இயந்திரம், சேமிப்பு கிடங்கு வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்க வேண்டும்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு, ‘மண்டல மேலாளர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருவள்ளூர் மண்டலம், எண்.46, வள்ளலார் தெரு, பெரியகுப்பம், திருவள்ளூர்’ என்ற முகவரியில் (தொலைபேசி எண். 9444662984, 044-27662417, 044-27664016) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT