கடலூரில் நடைபெற்ற தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார். 
Regional02

பருவமழையின் தீவிரத்தை எதிர்கொள்வோம் : கடலூரில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

செய்திப்பிரிவு

தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தை எதிர்கொள்ள மக்களை தயார்ப்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணிநடத்தினர்.

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் கடலூர் மாவட்டத்தில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இம்மழையை எதிர் கொள்ளும் வகையில் மக்களை தயார்ப்படுத்த அரசு நிர்வாகம் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடலூர் புனித வளனார் கலை, அறிவியல் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் தன்னார் வலர்கள் ஒன்றிணைந்து தென் மேற்கு பருவமழை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிர மணியம் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பருவமழையை எதிர்கொள்ள மக்களிடையே துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

அதில், மழைக்காலங்களில் டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் அருகே செல்லக் கூடாது; இடி, மின்னலின் போது மின் சாதனங்களை பயன்படுத்த கூடாது; மழை பெய்யும் போது மரத்தின் அடியில் நிற்க கூடாது; மழைக்காலங்களில் நீர் நிலைகளின் அருகில் செல்ல வேண்டாம்; அறுந்து விழுந்து கிடக்கும் மின்கம்பிகளை பார்த்தால் உடனே அவசர உதவி எண் 1077-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் போன்ற தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த விழிப்புணர்வு பேரணி யில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்சித் சிங், கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, வட்டாட்சியர் பலராமன் மற்றும் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண் டனர்.

அறுந்து விழுந்து கிடக்கும் மின்கம்பிகளை பார்த்தால் அவசர உதவி எண் 1077-க்கு தெரிவிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT