செம்பட்டி ஆட்டுச் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடுகள். 
Regional01

செம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை அமோகம் :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நடக்கும் ஆட்டுச் சந்தை இரு நாட்களுக்கு முன்பு நடந்தது.

ஆகஸ்ட் 3-ம் தேதி ‘ஆடி 18' என்பதால், ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர். குரும்பாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு என ஆடுகள் விற்பனையில் அதிகபட்சமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ. 13 ஆயி ரம் வரை விலை போனது.

இறைச்சிக் கடைக்காரர்கள், கோயிலுக்கு கிடா வெட்டு பவர்கள் என அதிகம் பேர் ஆடுகளை வாங்கிச் சென்றதால் கரோனா வுக்குப் பிறகு வியாபாரம் அமோகமாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தவர்களுக்கு கூடுதல் விலை கிடைத்ததால் அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

SCROLL FOR NEXT