Regional02

மானுக்கு சிகிச்சை அளித்த வனத்துறை :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அருகே காயமடைந்த பெண் மானை மீட்ட வனத்துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்து சரணாலயத்துக்குள் விட்டனர்.

ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை கண்மாயில் தண்ணீர் குடிக்க வந்த இரண்டு வயது பெண் மான் சிறு காயத்துடன் சனிக்கிழமை காலை அப்பகுதியில் சுற்றித் திரிந்தது. அங்கு ரோந்து சென்ற ராமநாதபுரம் வனத்துறையினர் காயமடைந்த மானை மீட்டு ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். கால்நடை மருத்துவப் பணியாளர்கள் மூலம் முதலுதவி அளித்து அந்த மானை தேர்ந்தங்கல் சரணாலயத்தில் பாதுகாப்பாக விட்டனர்.

SCROLL FOR NEXT